search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலக்ட்ரீசியன் கொலை"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்தபோது ஜேம்ஸ் - ராஜ்குமார் இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • காயமடைந்த ராஜ்குமார் ஜேம்சை பழி வாங்க சமயம் பார்த்து காத்து இருந்தார்.

    போரூர்:

    சென்னை வடபழனி, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 63) எலக்ட்ரீசியன்.

    இவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதி 100 அடி சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு முகம் சிதைந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஜேம்சை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தாக்கியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்தபோது ஜேம்ஸ் ராஜ்குமார் இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜேம்ஸ் உருட்டுக்கட்டையால் ராஜ்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ராஜ்குமார் ஜேம்சை பழிவாங்க சமயம் பார்த்து காத்து இருந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஜேம்ஸ் மதுபோதையில் படுத்து கிடந்ததை கண்ட ராஜ்குமார் அவரை அருகில் கிடந்த கட்டையால் சரமாரியாக தாக்கி துடிக்க துடிக்க கொலை செய்து விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • கண்ணன் கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.
    • கண்ணன் நள்ளிரவில் ராஜ் இருந்த வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே கரம்பவிளை சேர்ந்தவர் ராஜ்(வயது 40). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் வீரராகவபுரம் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்துள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(32). இவர் எலக்ட்ரீசியன் வேலைபார்த்து வருகிறார். கண்ணன் அந்தப் பகுதியில் செல்லும் சிறுமிகளை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    அதேபோல் கடைக்கு சென்ற ராஜ் மகளை கேலி கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராஜ், தனது மைத்துனர் ராஜ வடிவேலுவுடன் சென்று கண்ணனிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். அப்போது கண்ணன் கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.

    இதனையடுத்து வீடு திரும்பிய ராஜ் கோவில் காவல் நிலைய போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த போலீசார் கண்ணன், ராஜ் ஆகியோரை காவல் நிலையத்திற்கு காலையில் வரும்படி தெரிவித்து விட்டு சென்றனர்.

    இதனையடுத்து ராஜ் மகள்களுடன் அவரது மாமியார் வீட்டில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் கண்ணன் நள்ளிரவில் ராஜ் இருந்த வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜ், அவரது மைத்துனர் ராஜ வடிவேல் ஆகியோர் கண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த கோவில் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட கண்ணனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    ×